» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினரை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அவர்கள், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இந்த சந்திப்பின் போது ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசிவிஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)


ஒரு சாமானியன் கேள்விMar 22, 2026 - 09:00:50 PM | Posted IP 162.1*****