» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)
அம்பை காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்களிடம் நகை பறிக்க முயன்ற திருச்சியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க, கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் ஏற்கனவே நகை திருட்டில் ஈடுபட்டு கைதான பெண் குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகளை அம்பை போலீசார் வைத்திருந்தனர். மேலும், சாதாரண உடையில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 5 பெண்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பக்தர்களிடம் நகை பறிக்கத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 37), இசக்கியம்மாள் (36), கவுதமி (35), லட்சுமி (35) மற்றும் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த நாகேஸ்வரி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் யாரும் வந்திருந்தார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


