» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

நாகர்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிரச்சார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் நேற்று அதிரடி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கித் தனது பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒழுகுனேசேரி அப்டா மார்க்கெட் மேம்பாலத்தின் கீழ் வாகனம் வந்தபோது, கூட்டுறவு தணிக்கை அலுவலர் ஜெய சுபாஜினி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனத்தை மறித்தனர்.
சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வாகனத்திலிருந்த பெட்டிகள் மற்றும் பைகளை அணு அணுவாகச் சோதனையிட்டனர். ஒரு கட்டத்தில், வாகனத்தின் பேட்டரி பாக்ஸையும் திறந்து காட்டும்படி அதிகாரிகள் கெடுபிடி காட்டினர்.
பாதுகாவலர்கள் சற்றே தயங்கியபோது, இடைமறித்த எடப்பாடி பழனிசாமி, "பரவாயில்லை, சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்போம், பேட்டரி பாக்ஸையும் திறந்து காட்டுங்கள்" என உத்தரவிட்டார்.
சுமார் சில நிமிடங்கள் நீடித்த இந்தத் தீவிர சோதனையில் பணம், பரிசுப் பொருட்கள் என எதுவுமே சிக்கவில்லை. மேலும், வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளுக்கும் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.
முன்னாள் முதல்வரின் வாகனத்திலேயே பேட்டரி பாக்ஸ் வரை திறந்து சோதனை செய்யப்பட்டது அப்பகுதியில் இருந்த தொண்டர்களிடையே சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

