» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். இசக்கிமுத்து, நேற்று முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஆர். இசக்கிமுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த இசக்கிமுத்து, பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார். இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)


