» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஸ்தவா மற்றும் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இன்று (05.04.2026) பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஸ்தவா, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்குச் சென்றார். அம்பாசமுத்திரத்தில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் பலகையைப் பார்வையிட்டார்.
நாங்குநேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு அறை (Strong Room), கட்டுப்பாட்டு அறை மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பல்வேறு பகுதிகளில் சோதனைப் பணிகளைப் பார்வையாளர் ஆய்வு செய்தார்:
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (SST) செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இராதாபுரம் தொகுதியில் பறக்கும் படை குழுவினர் (FST) வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டார்.
அதேபோல், தேர்தல் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி, அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி சங்கன்திரடு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்டு வரும் சோதனைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, அம்பாசமுத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


