» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)
கடந்த 2006-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடலை ரகசியமாக எரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், போதிய சாட்சிகள் இல்லாததால் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மசூது (46). இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி அந்தப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது மசூது உயிரிழந்ததாகவும், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் போலீசாரே ரகசியமாக எரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மசூதைக் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி அசனம்மாள் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி (CB-CID) போலீசார் இந்த வழக்கை 11 பிரிவுகளின் கீழ் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மசூது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதுடன், அப்போது பணியில் இருந்த 13 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகாருக்குப் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள்:
தற்போது உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்:
பிரதாப் சிங் (கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் - ADSP)
ஈஸ்வரன் (சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர்)
சந்திரபால் (துணை கண்காணிப்பாளர் - DSP)
லட்சுமணராஜ் (இன்ஸ்பெக்டர்)
சத்யராஜ் (சப்-இன்ஸ்பெக்டர்)
மற்றும் தலைமை காவலர் ரத்தினசாமி, காவலர்கள் பாஸ்கரன், மைக்கேல், முத்து, ஸ்டீபன், முருகன், மாடசாமி, பரமசிவன் ஆகியோர் விடுதலையாகியுள்ளனர்.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)



BabuApr 7, 2026 - 10:33:09 PM | Posted IP 172.7*****