» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - சென்னை இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்; தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 8:29:33 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், திருநெல்வேலி - சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070 / 06069): நெல்லை - எழும்பூர் (06070): ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11:40 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும்.
எழும்பூர் - நெல்லை (06069): ஏப்ரல் 17, 24 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மதியம் 1:25 மணிக்குச் சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு நெல்லை வரும்.
நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06166 / 06165): நெல்லை - தாம்பரம் (06166): ஏப்ரல் 12 (நாளை), 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:45 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
தாம்பரம் - நெல்லை (06165): ஏப்ரல் 13, 20 மற்றும் 27 ஆகிய திங்கட்கிழமைகளில் மதியம் 1:55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நெல்லை வரும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காலப் பயணங்களை முன்னிட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுவது தென் மாவட்டப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)


