» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தமிழகத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் செலவினங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பறிமுதல்கள் குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் பேசியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலைச் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை எவ்வித சமரசமுமின்றி மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன், முன்னிலை வகித்தார். மேலும், பொதுப் பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ, (திருச்செந்தூர் / திருவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா, (ஓட்டப்பிடாரம் / கோவில்பட்டி), காவல் பார்வையாளர் ஹியர்மத் சுதிர் கல்யா, செலவினப் பார்வையாளர்கள் அனுப் குமார் ஜெயின், சிவ பிரசாத் பால், நகுல் அகர்வால், மற்றும் சன்னி கச்வாஹா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறும் ராமராஜன்: அதிமுக-வில் சலசலப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 11:51:50 AM (IST)

நாங்குநேரி தொகுதி: பறக்கும் படை பணிகளைப் பொது பார்வையாளர் ஸ்ரீ வஷ்தவா ஆய்வு!
சனி 11, ஏப்ரல் 2026 11:41:35 AM (IST)

திமுக, அதிமுக-வுக்கு ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம்!
சனி 11, ஏப்ரல் 2026 11:15:50 AM (IST)

மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை: 29 நாட்களில் அதிரடி தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 8:52:15 AM (IST)

