» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் கைது – பணியிடை நீக்கம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:16:30 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு உதவியாக இருந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் கைது செய்யப்பட்டு, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அவரது 28 வயது மனைவி உடனிருந்தார்.

அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்குப் பாதுகாப்புப் பணிக்காக, தட்டப்பாறை தெற்குத் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (36) என்ற காவலர் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று நள்ளிரவில், காவலர் கோபாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் சென்று அலைபேசி சார்ஜர் கேட்பது போலப் பேச்சு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிற்கு அவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்துப் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காவலர் கோபாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது: பாலியல் தொந்தரவு, பெண்ணைத் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு, அவர் நேற்று (திங்கள்கிழமை) முறைப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

SeenivasagamApr 14, 2026 - 09:19:23 AM | Posted IP 172.7*****

இது தான் திராவிட மாடல் லட்சணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory