» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)
ஆலங்குளம் அருகே பனை விவசாயி சுடப்பட்ட விவகாரத்தில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி போலீசாரின் ஆரம்பக்கட்ட விளக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் மகன் மணிகண்டன் (32) தனது தோட்டத்தில் கள் இறக்குவதாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க, கடந்த 7-ம் தேதி ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டன் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
தோட்டத்திற்குச் சென்று கள் இறக்கப்படுகிறதா எனச் சோதனையிட முற்பட்டபோது, மணிகண்டனின் உறவினரை எஸ்.ஐ இசக்கிராஜா தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மணிகண்டன் மற்றும் இசக்கிராஜா இடையே மோதல் உருவானது. அப்போது இசக்கிராஜா தனது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில், மணிகண்டனின் இரண்டு கால்களிலும் குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
மணிகண்டன் தங்களைக் கம்பால் தாக்கியதால், தற்காப்பிற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்.ஐ இசக்கிராஜா தெரிவித்தார். எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலின் போது கம்பு தவறுதலாக எஸ்.ஐ மீது பட்டதாகவும், ஆனால் அவர் திட்டமிட்டே சுட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்: உதவி ஆய்வாளர் இசக்கிராஜா சீருடை அணியாமல் (மஃப்டியில்) இருக்கிறார். மணிகண்டன் ஓட்டும் இருசக்கர வாகனத்தின் பின்னால் இசக்கிராஜா அமர்ந்து செல்கிறார்.
சம்பவம் நடந்த சமயத்தில் மணிகண்டன் மரத்தில் கள் இறக்கிக் கொண்டிருக்கவில்லை; அவர் தனது வீட்டில்தான் இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மணிகண்டன் தாமாகவே முன்வந்து எஸ்.ஐ-யை தனது வாகனத்தில் அழைத்துச் சென்றதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது 'தற்காப்புக்காகச் சுட்டோம்' என்ற போலீஸ் தரப்பு வாதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இசக்கிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி ஆதாரம் இந்த வழக்கில் மிக முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)


