» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!

ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாளையங்கோட்டை பாரதிநகரைச் சேர்ந்தவர் டாக்டர் முத்துமணி. இத் தந்தை இந்திரஜித், இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். நான்கு யுத்தங்களில் பங்கேற்ற காரணத்தால் இவருக்கு வீரவநல்லூர் பகுதியில் 1 ஏக்கர் 67 சென்ட் நிலத்தை அரசு வழங்கியிருந்தது. இந்திரஜித் 1994 ஆம் ஆண்டு காலமானார்.

இத் நிலத்தை வாரிசுகள் தங்கள் பெயருக்கு மாற்ற முயன்றபோது, சார்பதிவாளர் அலுவலக முறைகேடு மூலம் வேறு சிலர் போலி ஆவணங்கள் தயாரித்துப் பதிவு செய்திருப்பது வில்லங்கச் சான்று வழியாகத் தெரியவந்தது.நிலம் அபகரிக்கப்பட்டது குறித்து டாக்டர் முத்துமணி நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியைச் சேர்ந்த மாரியப்பன், இத் மனைவி சரவணத்தம்மாள் மற்றும் கோடரங்குளத்தைச் சேர்ந்த லட்சுமி ஆகிய மூவரும் இணைந்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாரியப்பன், சரவணத்தம்மாள், லட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory