» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)
சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விபரம் தமிழக முதல்வருக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 41 பேர் கொலைக்குக் காரணம் காவல் துறைதான் என்ற அபாண்ட குற்றச்சாட்டை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது தெரிவித்தீர்களா என்றும் வினவியுள்ளார்.தமிழக முதல்வர் அரசு தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு வசனம் பேசி வருகிறாரா என அப்பாவு விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று நக்கலடிக்கும் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் 2 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை கட்சி நிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகத் தவெக கட்சியினர் புலம்புவது காதுகளுக்கு எட்டவில்லையா என்றும், இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
சனி 11, ஜூலை 2026 12:02:46 PM (IST)

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)


