» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
சனி 11, ஜூலை 2026 12:02:46 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (63) மற்றும் அவரது மனைவி சுப்பம்மாள்(54) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்சொன்ன 2 பேரின் தொடர் சட்டவிரோத செயல்களை கருத்தில் கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சுப்பம்மாள் மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், பழனி பாளை மத்திய சிறையிலும் நேற்று (10.7.2026) அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், களக்காடு பனையன்குளம் ஜங்ஷன் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த களக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(எ) அருண்(19), ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துபாலன்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 2 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன 2 வாலிபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)


