» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!

திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

NellaiapparValaikappu.jpg

நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு, காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ஆடிப் பூரத் திருவிழா, கடந்த 9 ஆம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா நாட்களில் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடுகளும், இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 4 ஆம் திருநாளை முன்னிட்டு, காலையில் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிப் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களைக் காணிக்கையாக வழங்கி வழிபாட்டில் பங்கேற்றனர்.

வளைகாப்பு நிகழ்ச்சியின் நிறைவாகச் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory