» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST)
தூத்துக்குடி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு திட்டமிட்டு மறைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஆண்டுக்கு 40 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த ₹7,000 கோடி மதிப்பிலான விரிவாக்கப் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் ₹400 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலைய ரன்வே நீட்டிக்கப்பட்டு, பெரிய விமானங்கள் தரையிறங்கும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ரயில்வே துறை மூலம் தூத்துக்குடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் ₹1.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. சமூக நலத்துறை அங்கன்வாடி கட்டிடங்கள் பலவும் மத்திய அரசு நிதியிலேயே கட்டப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் கீதா ஜீவனும், முதல்வரும் உணர வேண்டும்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களுக்கு நேரடியாகப் பலன் அளிக்கின்றன. குறிப்பாக, குலசேகரபட்டினம் இஸ்ரோ தளம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது மத்திய அரசுதான்.
நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதில் மாநில அரசுகள் தனிப்பட்ட விலக்கு வழங்க இயலாது. தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது. அரசியல் லாபத்திற்காக உண்மைகளை மறைக்காமல், தரவுகளை மக்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

த.வெ.க., வேட்பாளருக்காக பிரச்சாரம்: நண்பரின் மகனுக்காக வாக்கு சேகரித்த நடிகர் ராமராஜன்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:49:54 PM (IST)

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)

