» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவிருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை முன்னிட்டு, தூத்துக்குடியில் திமுக சார்பில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வின் போது, "தமிழக உரிமையைக் காப்போம்", "மத்திய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம்", "தேசிய ஜனநாயக கூட்டணியின் சதியை முறியடித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க" என்பன உள்ளிட்ட பல்வேறு வெற்றி முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநிலப் பேச்சாளர் சரத்பாலா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
கந்தன்Apr 19, 2026 - 02:16:26 PM | Posted IP 104.2*****
S.I.R பணி மிக மோசடியாக நடைபெற்றுள்ளது சுருக்கபட்டியலில் இடம்பெறாது இறுதி வாக்காளர் பட்டியலில் SIR க்கு விண்ணப்பிக்காத, கோராத , ஆதார் உடன் பொருந்தாத பெயர் திருத்தம் கோராது தொகுதிமாறி புலம்பெயர்ந்து வாக்குரிமை ரத்தாகி புதிய வாக்காளர் உரிமை பெற்ற வாக்காளர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர் கள்ள வாக்கை செலுத்தவே?. ஆகவே வாக்கு சாவடி வாரியாக தேர்தல் நாள் பதிவான வாக்காளர்கள் விபரப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.அதில் கள்ள வாக்கு பதிவாகின் வாக்கு சாவடி அலுவலர் நிர்வாகிகள் மற்றும் வரிசைபதிவு எண் அடிப்படையாக விவிபேட் வாக்குச்சீட்டு அடிப்படையாக முகவர் மற்றும் கட்சிகள் மீது தேசத்துரோக வழக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)


இது மக்களுக்காக ஆட்சியா ?Apr 20, 2026 - 09:54:49 AM | Posted IP 162.1*****