» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கான இடஒதுக்கீடு, இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பணகுடி வருகை தந்தார். அங்கு சுமார் 400 மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ சென்ற அவருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது ராஜ்நாத் சிங் பேசிய முக்கிய அம்சங்கள்: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.9,000 ஆக உயர்த்தப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கிலும் ரூ.10,000 வரவு வைக்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். படித்த இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
திமுக அரசு மீது விமர்சனம்: தமிழகத்தை திமுக அரசு கடன் சுமையில் தள்ளியுள்ளதாக விமர்சித்த அவர், மத்திய அரசு இதுவரை ரூ.11 லட்சம் கோடி நிதி வழங்கியும் மக்கள் பலன் பெறவில்லை என்றார். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், சாராய மாஃபியாக்களை ஒழிக்கத் தனிப்படை அமைக்கப்படும் என்றும், ஊழல் பணம் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் எச்சரித்தார்.
முன்னதாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து புளியங்குடியில் அவர் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வுகளில் அதிமுக (ஓபிஎஸ் அணி) நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


