» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக, 290-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கப் போவதில்லை என கிராம மக்கள் ஒன்றிணைந்து அதிகாலை முதலே தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். காலை முதல் ஒரு வாக்கு கூட அங்கு பதிவாகாமல் இருந்தது.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி, வாக்குச் செலுத்தக் கூடாது எனக் கூறி அங்கிருந்து விரட்ட முயன்றனர். இதனால் வாக்குச்சாவடி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து, அந்த இளம்பெண்ணை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதன் மூலம், நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் முதல் வாக்கு பதிவானது.
வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் சமரசப் பேச்சுகளை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, மக்களை வாக்களிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தபசுத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்!
திங்கள் 27, ஜூலை 2026 8:01:44 AM (IST)

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)


