» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவின் போது ஏற்பட்ட தகராறில், வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (20) என்ற வாலிபர் மதுபோதையில் அங்கிருந்த மகாராஜா (18) என்பவரிடம் வீண் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட மகாராஜாவின் உறவினர் சதீஸ்குமார் (29), விக்கியைக் கண்டித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பர்கள் மூன்று பேரைச் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் அரிவாளால் சதீஸ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த சதீஸ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவில் திருவிழாவில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Apr 25, 2026 - 06:51:45 PM | Posted IP 172.7*****

காரணம் மதுபோதை, தெருவுக்கு ஒரு சாராய கடைகளை திறந்து மக்களை போதையில் விழவைப்பதே திராவிட சூப்பர் மாடல். வாழ்க திராவிட குடும்பங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory