» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு!
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:55:51 AM (IST)
சாத்தான்குளம் அருகே சவேரியார்புரத்தில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்த 90 வயது முதியவர், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி (90). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனால் மரிய அந்தோணி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மரிய அந்தோணியின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சாத்தான்குளம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரிய அந்தோணி சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து சுமார் 3 நாட்கள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் மது அருந்திவிட்டு உணவு ஏதும் உட்கொள்ளாததால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்துச் சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முதியவரின் மரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)



ஒருவன்Apr 27, 2026 - 09:14:33 AM | Posted IP 162.1*****