» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)
சாயல்குடி அருகே மூதாட்டியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட 3 பேர் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர். மாரியம்மாள் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அந்த கும்பல், மூதாட்டியின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்துச் சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த மூவரைப் பிடித்த தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஒரு அடகுக் கடையில் அடகு வைத்திருந்த நகைகளையும் போலீசார் மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)


