» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
விழாவின் 9-ஆம் நாளான நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தட்டு வாகனத்தில் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தனர். அதனைத் தொடர்ந்து தாணுமாலய சாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
காலை 8:10 மணிக்கு 3 தட்டு வாகனங்களில் சுவாமி, அம்பாள், அறம் வளர்த்த நாயகி அம்மை மற்றும் விநாயகர் தனித்தனியாக எழுந்தருளி கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
பின்னர், சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மன் சப்பர தேரிலும், விநாயகர் ஒரு தேரிலுமாக எழுந்தருளினர். தேர்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8:40 மணிக்குத் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. "ஓம் நமச்சிவாய" என்ற கோஷங்களுடன் திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர்.
நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள், காலை 10:15 மணிக்கு வெடி முழக்கத்துடன் நிலையை வந்து அடைந்தன. அதன் பிறகு சுவாமிகளுக்குத் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மீண்டும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் எழுந்தருளினர். இந்தத் தேரோட்ட வைபவத்தில் உள்ளூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)


