» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)
தமிழகத்தில் நிலவி வரும் கடும் கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் வரத்து குறைந்ததால் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சந்தைகளில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் தக்காளி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் 'இலைக்கருகல்' நோய் ஏற்பட்டு விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் தக்காளியின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது. நெல்லையில் சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது சில்லறை விற்பனையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.58-க்கு விற்பனையானது.
சின்ன வெங்காயத்தின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது ஜண்டா ரக உள்ளி ரூ.70-க்கும், நாட்டு உள்ளி ரூ.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் விதை உள்ளியை அதிகளவில் வாங்குவதால் இதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், பெரிய வெங்காயம் (பல்லாரி) விலையில் மாற்றமின்றி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்திலிருந்து எலுமிச்சை வரத்து இருந்தபோதிலும், கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தாகம் தீர்க்கும் தர்பூசணி பழங்களின் நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தர்பூசணி, தற்போது ரூ.40-ஆக உயர்ந்துள்ளது. கோடை வெயில் நீடிக்கும் வரை காய்கறிகளின் விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)


