» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

VKPuramWater.jpg

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29.51 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காணொலி காட்சி வாயிலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, பாபநாசம் நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் குத்துவிளக்கேற்றினார்.

பின்னர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோக அமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திட்டத்தின் செயல்பாடு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் எதிர்கால மக்கள் தொகை உயர்வைக் கருத்தில் கொண்டு, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

21 வார்டுகளைக் கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான விக்கிரமசிங்கபுரத்தில் (மக்கள் தொகை சுமார் 48,399), இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் 25,000 வீடுகளுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் உள்கட்டமைப்புகள் தற்போதைய மக்கள் தொகை மற்றும் நகர வளர்ச்சிக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக அமைப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மண்டல நிர்வாக இயக்குநர்  நவேந்திரன், மண்டல செயற்பொறியாளர் சனல்குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் மகாதேவன், நகராட்சித் தலைவர்  செல்வசுரேஷ், நகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory