» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த டீ மாஸ்டருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை அருகே பேட்டை செக்கடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு, 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துகுமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட முத்துகுமாருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)


