» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் சூறைக் காற்றுடன் திடீர் கனமழை : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன!
சனி 2, மே 2026 8:48:01 AM (IST)

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது. குறிப்பாகப் பாளையங்கோட்டையில் நேற்று 100.5 டிகிரி வெயில் பதிவானது. இதனால் ஏற்பட்ட அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாலை 6 மணி அளவில் திடீரென்று இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சிறிது நேரம் கொட்டித் தீர்த்த இந்த மழையானது இரவு வரை சாரலாக நீடித்ததால், வெப்பம் குறைந்து இதமான சூழல் ஏற்பட்டது.
சூறைக் காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள்:
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பூங்கா மற்றும் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவண்ணநாதபுரத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், சிவராமன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை டவுன் பகுதியில் இரண்டு தெருவிளக்கு கம்பங்கள் சாய்ந்தன. பொட்டல் பகுதியில் மின்கம்பங்கள் சரிந்ததால் பொட்டல், திருவண்ணநாதபுரம், அருகன்குளம் உள்ளிட்ட இடங்கள் இருளில் மூழ்கின. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டனர்.
மழை அளவு விவரம் (மி.மீ):
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு வருமாறு:
ஊத்து: 78
நாலுமுக்கு: 71
காக்காச்சி: 66
மாஞ்சோலை: 44
அம்பை: 37
கன்னடியன் கால்வாய்: 13
மணிமுத்தாறு: 5
கருப்பாநதி: 1
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)


