» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)

திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வருகை தந்த புதிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்று, பள்ளி வகுப்பறைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1483 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு, மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, காலை சிற்றுண்டித் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திவிட்டு வகுப்புகளுக்குச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரயான்ஸ், கலர் பென்சில், அட்லஸ், காலணிகள் மற்றும் புத்தகப்பைகள் ஆகியவை இன்று பள்ளிகளிலேயே வழங்கும் பணிகள் பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த இறுதிப் புள்ளி விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும், தற்போதைய நிலவரப்படி சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறியவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு ஒரு அதிகாரி" (One School One Officer) என்ற அடிப்படையில், துணை ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அதிகாரி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகள் கண்காணிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு வராத மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டம் கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டாரக் கல்வி அலுவலர் மாரியம்மாள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் : பெண் விஏஓ கைது! – உதவியாளரும் சிக்கினார்!
வியாழன் 4, ஜூன் 2026 8:43:57 AM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
வியாழன் 4, ஜூன் 2026 8:37:41 AM (IST)

2016 ராதாபுரம் தேர்தல் முடிவுகள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதன் 3, ஜூன் 2026 4:55:48 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

அமலி பள்ளி ஆசிரியை இனிகோவுக்கு வெற்றி விழா
புதன் 3, ஜூன் 2026 8:55:24 AM (IST)


