» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது சொந்த ஊரான சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று (08-06-2026) நேரில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் தனது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். முற்றிலும் மரியாதை நிமித்தமாக மட்டுமே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



BabuJun 8, 2026 - 07:16:20 PM | Posted IP 172.7*****