» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!

புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

கயத்தார் அருகே இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக உருவான காதல் விவகாரத்தை அண்ணன் கண்டித்து அடித்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா, தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி (19). இந்த இளம்பெண் கடந்த மூன்று வருடங்களாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் அவரது தாயார் ஆகியோர் இக்காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அபிசெல்வி, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சி ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபிசெல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், நேற்று அவர் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தனியார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory