» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!

சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், நிர்வாகக் காரணங்களுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கருப்பண்ண ராஜவேல், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் தங்களின் புதிய மாவட்ட அலுவலகங்களில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

BabuJun 14, 2026 - 08:32:04 PM | Posted IP 104.2*****

athiradi uthravu nu yenna meaning?p news editor

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory