» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் அதிகபட்சமாக 63 மதுக்கடைகள் மூடல்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, ஜூன் 2026 4:31:31 PM (IST)
தமிழகத்தில் முதற்கட்டமாக மூடப்பட்டுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளின் மாவட்ட மற்றும் மண்டல வாரியான அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. இதன் மூலம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனினும், மதுவினால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளைத் தடுக்கப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதனிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது. அவர் பதவியேற்றவுடன் இளைஞர்களைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் பரவலைத் தடுக்கவும் 65 சிறப்புப் படைகளை அமைத்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டார்.
அரசின் விதிமுறைகளின்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த 186 கடைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட்டு வந்த 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் இரண்டு வார காலக் கெடுவிற்குள் மூடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் மாற்று இடங்களுக்குப் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும், சட்டவிரோத பார் விற்பனைகள் தடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியிருந்த நிலையில், தற்போது மூடப்பட்ட கடைகளின் முழு விபரத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 63 கடைகளும், கோவை வடக்கில் 48 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மாவட்டம் எண்ணிக்கை
சென்னை வடக்கு 13
சென்னை மத்திய 9
சென்னை தெற்கு 9
காஞ்சிபுரம் வடக்கு 10
காஞ்சிபுரம் தெற்கு 8
திருவள்ளூர் கிழக்கு 27
திருவள்ளூர் மேற்கு 6
கோயம்புத்தூர் வடக்கு 48
கோயம்புத்தூர் தெற்கு 23
கரூர் 8
ஈரோடு 42
திருப்பூர் 31
நீலகிரி 27
அரக்கோணம் 7
தருமபுரி 7
கிருஷ்ணகிரி 7
நாமக்கல் 14
சேலம் 22
திருவண்ணாமலை 19
வேலூர் 6
கடலூர் 21
நாகப்பட்டினம் 4
புதுக்கோட்டை 17
பெரம்பலூர் 6
தஞ்சாவூர் 6
திருச்சிராப்பள்ளி 15
திருவாரூர் 6
விழுப்புரம் 9
திண்டுக்கல் 26
கன்னியாகுமரி 15
ராமநாதபுரம் 29
தேனி 12
திருநெல்வேலி 33
தூத்துக்குடி 63
மதுரை தெற்கு 39
மதுரை வடக்கு 13
விருதுநகர் 42
சிவகங்கை 18
மண்டல வாரியான எண்ணிக்கை
சென்னை மண்டலம் 82
கோயம்புத்தூர் மண்டலம் 179
சேலம் மண்டலம் 82
திருச்சி மண்டலம் 84
மதுரை மண்டலம் 290
மொத்தம்: 717 கடைகள்
மக்கள் கருத்து
அரசியல் பார்வையாளர்Jun 15, 2026 - 04:43:48 PM | Posted IP 104.2*****
அப்படியே மாவட்ட வாரியாக எந்தெந்த ஊர்களில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)



என்னது இதுJun 15, 2026 - 06:33:27 PM | Posted IP 162.1*****