» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)
தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளதாகத் தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விபரம்: சில நாட்களுக்கு முன்னதாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகளால், அதே கட்சியின் பெண் செயல்பாட்டாளராக உள்ள இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.இந்தச் சம்பவம் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று (14.06.2026) தூத்துக்குடி ஒன்றியம் தாளமுத்துநகர் அருகே உள்ள ஆனந்த நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில், 12 வயது சிறுமிக்கு மத போதகராக உள்ள பாதிரியார் அருள்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த மத போதகர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அறியவருகிறது.
இளம் பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என எல்லா வயதுப் பெண்களும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 'சிங்கப்பெண் படையை' உருவாக்கிப் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்கின்ற முதலமைச்சர் சுய ஒழுக்கம் பற்றி உபதேசம் செய்து வருகிறார். ஆனால், உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படைக்குத் தொடர்பு கொள்ளத் தனியான உதவி எண் எதுவும் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விட்டு வெற்றுப் பேச்சு பேசி மக்களையும் பெண்களையும் ஏமாற்றுகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தற்போதைய ஆட்சியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. செயல்படாத அரசாக, மக்களைப் பாதுகாக்காத அரசாகத் த.வெ.க அரசு இருந்து வருகிறது. அரசின் மெத்தனமான இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)


