» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : தற்காலிகக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன!
புதன் 24, ஜூன் 2026 3:15:25 PM (IST)

கோவில்பட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் இன்று அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காந்தி மண்டபம் முன்பாக நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். குறிப்பாக, அப்பகுதியில் பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்தும், காந்திய சிந்தனைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வந்த இறைச்சி உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகளும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.
நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை:
தற்போது தற்காலிக ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ள நிலையில், காந்தி மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை முழுமையாக அளவீடு செய்து, அங்குள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



RamanJun 25, 2026 - 01:48:08 PM | Posted IP 162.1*****