» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 7:57:04 AM (IST)
தூத்துக்குடியில் பள்ளி படிக்கும் தனது சொந்த மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வரும் ஒரு நபர், அடிக்கடி மது அருந்திவிட்டுத் தனது வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த காவலர் கடுமையான குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, வீட்டில் பிளஸ்-2 படித்து வரும் அவரது 17 வயது மகள் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த காவலர், தனது சொந்த மகளிடமே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி உடனடியாகத் தைரியமாகச் செயல்பட்டு, பெண்களுக்கான 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையினரின் அவசர உதவி எண்ணான 1091-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகார் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த காவலரைத் தப்பவிடாமல் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவலரை முறையாகக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே சொந்த மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



தமிழன்Jun 25, 2026 - 08:32:37 AM | Posted IP 172.7*****