» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெகவில் தகுதியான தமிழ்நாட்டவர் ஒருவர்கூட இல்லையா? கனிமொழி எம்பி கேள்வி!
சனி 27, ஜூன் 2026 10:27:18 AM (IST)

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர் ஒருவர் கூட இல்லையா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகக் கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தவெக அரசுக்கு இரண்டு முக்கியக் கேள்விகளை எழுப்பித் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக தவெக அரசுக்கு இரண்டு கேள்விகள் மட்டுமே எழுகின்றன. தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய ஒரு முக்கிய அரசுப் பொறுப்பில், அதுவும் ஒரு அமைச்சருக்கு நிகரான உயரிய பதவியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவெக அரசு அமர்த்தியுள்ளது. ஆளும் தவெகவில் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர் ஒருவர் கூட இல்லையா?
மேகதாது அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் மாநில உரிமை சார்ந்த பல்வேறு நதிநீர்ப் பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நின்று செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாகச் செயல்படுவாரா? இவ்வாறு கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தவெக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மக்கள் கருத்து
S.ANANTHARAMANJun 27, 2026 - 04:30:55 PM | Posted IP 162.1*****
KANI MOZHI LOK SABHA MP MADAM HAS RAISED A REASONABLE AUESTION. LET US WAIT & WATCH FOR TN CM SIR REACTION & REPLY.
மேலும் தொடரும் செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)



ஆமாJun 27, 2026 - 06:56:35 PM | Posted IP 104.2*****