» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம் : மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!
புதன் 1, ஜூலை 2026 3:36:51 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 16, 17, 18, 49 மற்றும் 50 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள பி&டி காலனி, கதிர்வேல் நகர், சிவஜோதி நகர், விஷ்ணுபுரி, வேலவன் நகர், முத்து கிருஷ்ணா நகர், அசோக் நகர், ராஜிவ் நகர், பாரதி நகர், புஷ்பா நகர், எஸ்பிஎம் நகர், ஹரிராம் நகர், சந்திரேசன் நகர், நிக்லேசன் நகர், காந்தி நகர், கோக்கூர், பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், செல்சீனி காலனி, கோட்ஸ் நகர், அந்தோனியார்புரம், கிருபை நகர், முனியசாமி நகர், என்ஜிஓ (NGO) காலனி, சக்தி நகர், சாந்தி நகர், அமுதா நகர் மற்றும் அருணா நகர் உள்ளிட்ட 28 குடியிருப்புப் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுப் பணியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், "தற்போது இப்பகுதிகளில் பாதாள சாக்கடைக்கான பிரதான குழாய் பதிக்கும் பணிகள், வீடுகளுக்கான இணைப்பு குழாய் அமைக்கும் பணிகள் மற்றும் வீடுகளுக்குள் சேம்பர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பொதுமக்கள் தங்களின் வீட்டு கழிவுநீர் இணைப்புகளை இப்போதே பாதாள சாக்கடைக் குழாய்களுடன் இணைக்க வேண்டாம். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்ட பின்னரே, தங்களின் வீட்டு இணைப்புகளை அதனோடு இணைக்க வேண்டும்" எனப் பொதுமக்களுக்குக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஆனந்தி, உதவி நிர்வாகப் பொறியாளர் வான்மதி, பகுதிக் கழகச் செயலாளர் ரவீந்திரன், வட்டக் கழகச் செயலாளர்கள் சுரேஷ், பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிராஜா, சந்திர போஸ், கண்ணன் மற்றும் மாநகராட்சி, கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
JsamyJul 2, 2026 - 02:55:09 PM | Posted IP 104.2*****
KTC நகர் கிழக்கு பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் இரண்டு வருசமா குடியுர்ப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது இதுக்கு நடவடிக்கை உண்டா
Joseph Manuel BraviJul 2, 2026 - 12:28:25 PM | Posted IP 162.1*****
Kindly rectify Underground Drainage System and Storm water drainage in Ward 36
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)



muttaalJul 2, 2026 - 06:24:11 PM | Posted IP 104.2*****