» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பரபரப்பு : நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் தேக்கம்!

வியாழன் 2, ஜூலை 2026 10:18:17 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று இரவு முதல் 'கிரீன் கேட்' நுழைவு வாயிலில் உள்ள சரக்கு பெட்டக ஸ்கேனிங் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சரக்கு லாரிகளுக்கான சோதனைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, துறைமுக வளாகமே ஸ்தம்பித்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முக்கியப் பாதுகாப்புச் சோதனையான ஸ்கேனிங் பணியை மேற்கொள்ள முடியாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காகப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து சரக்குகளை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் துறைமுக வளாகத்திற்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இணைப்புச் சாலைகளிலும் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் தேங்கி நிற்கின்றன.

இதனால் லாரி ஓட்டுநர்கள் உணவின்றியும், வர்த்தகர்கள் தங்களது சரக்குகளை உரிய நேரத்திற்குள் கொண்டு சேர்க்க முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாமதம் காரணமாக, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேசக் கப்பல்களுக்குச் சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு, வர்த்தகப் பாதிப்பு உண்டாகும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துறைமுக நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

பணியாளர்Jul 2, 2026 - 11:13:44 AM | Posted IP 104.2*****

அங்கு பணிபுரியும் port பாஸ் எடுக்கும் ஆளு தினமும் 100 முதல் 1000 ரூபாய் வாங்குவான். ஒரு மாதம் பாஸ் கேட்டால் 1 வாரம் பாஸ் தான் கொடுப்பான் , 1 மதம் அல்லது 1 வருடம் பாஸ் கொடுக்கமாட்டான் , துட்டுக்காக போர்ட் பாஸ் எடுக்கும் இடத்தில நிறைய ஊழல்கள் நடக்கின்றன

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory