» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய ஓட்டை: வாகன ஓட்டிகள் அச்சம்!
வியாழன் 2, ஜூலை 2026 3:24:31 PM (IST)

நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாலமாக வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் விளங்கி வருகிறது. இந்த மேம்பாலத்தில் கடந்த காலங்களில் அடுத்தடுத்து பலமுறை பெரிய அளவிலான விரிசல்களும், ஓட்டைகளும் விழுந்து தற்காலிகப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்குப் பலவீனமடைந்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், பேருந்துகள் கடந்து செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலைப் பாலத்தில், அடுத்தடுத்து ஓட்டைகள் விழுவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாகச் சிமெண்ட் கலவைகளைப் பூசிச் சரிசெய்வதாலேயே இந்த உள்கட்டமைப்புப் பலவீனம் தொடர்கதையாக மாறி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பாலத்தின் நிலைமையைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தற்காலிகப் பூச்சுகளுக்குப் பதிலாகப் பாலத்தை முழுமையாகப் பலப்படுத்தும் நிரந்தரத் தீர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது. தற்போதைய ஓட்டை காரணமாக அப்பகுதியில் விபத்துகளைத் தடுக்கத் தற்காலிகப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வைக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)



அதுJul 2, 2026 - 04:30:14 PM | Posted IP 104.2*****