» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!

வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 7 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரொக்கம் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் பொறியியல் பிரிவில் நுழைந்து அதிரடிச் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனையின் போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் அறைகளில் போலீசார் தீவிரமாகப் பரிசோதனை மேற்கொண்டனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூபாய் 7,49,900 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்ற நிலையில், தற்போதைய பணப் பறிமுதல் சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பொறியாளர்கள் திலகம் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory