» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் தூய இம்மானுவேல் ஆலயத்தில் முன்னாள் நிர்வாகத்தினரின் நிதி முறைகேடுகளைக் கண்டித்து சபை மக்கள் இன்று காலை ஆலயம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குத் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலப் பொறுப்பாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 09.11.2025 அன்று நடைபெற்ற சேகர மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆபிரகாம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை ஏற்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகம் செயல்படுவதைத் தொடர்ந்து தடுக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் நிர்வாகத்தினர் தங்களது 13 மாத அதிகாரக் காலத்தில் சபை மக்களின் காணிக்கை, பண்டிகை வரி, ஆசன நன்கொடை, ஆண்டு சந்தா உள்ளிட்ட தொகைகளை வசூலித்த போதிலும், அவற்றுக்கான வரவு-செலவு கணக்குகளை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்தப் பணத்தைச் சேகர வங்கி கணக்கிலும் செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சேகர அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள், வரவு-செலவு பதிவேடுகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தற்போதைய நிர்வாகிகள் மீது களவுப் புகார் சுமத்த முயற்சி நடந்ததாகவும், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி ஹார்ட்டிஸ்க் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விரிவாகக் குறிப்பிட்டார்.
தற்போது மார்ச் மாதம் முதல் பொறுப்பேற்றுள்ள குரு காலேப் மேன்சிங் மற்றும் தற்போதைய புதிய நிர்வாகம் மேற்கண்ட முறைகேடுகளைக் கண்டறிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதால், அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆபிரகாம் தரப்பினர் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சபை மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)



jvm .Jul 5, 2026 - 03:38:15 PM | Posted IP 172.7*****