» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.07.2026) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 525 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடரந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால் கோரி வரப்பெற்ற மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.2,79,000 மதிப்பில் செயற்கை கால் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி .மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) புஷ்பாதேவி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு சரவணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .கலைமதி, உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)


