» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)
தூத்துக்குடியில் திடீரென மாயமான அண்ணன் மற்றும் தங்கையைக் காவல்துறையினர் 5 மணி நேரத் தீவிர தேடுதலுக்குப் பிறகு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பாதுகாப்பாக மீட்டனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அவரது தங்கை 12 வயது சிறுமி இருவரும் நேற்று மாலை கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். ஆனால், இரவு வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆய்வாளர் பொறுப்பு ஷேக் அப்துல் காதர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுவர்கள் இருவரும் திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. உடனடியாகத் திருச்செந்தூர், ஆறுமுகநேரி மற்றும் குலசேகரப்பட்டினம் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்ததைத் திருச்செந்தூர் காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின், முத்தையாபுரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் விரைந்து சென்று இரு குழந்தைகளையும் மீட்டு, அவர்களிடம் உரிய அறிவுரைகள் கூறிப் பெற்றோரிடம் ஒப்படைத்தார். புகார் அளிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் குழந்தைகளை விரைந்து மீட்ட முத்தையாபுரம் காவல்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)



naan thaanJul 29, 2026 - 04:06:29 PM | Posted IP 172.7*****