» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி இரண்டாவது கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக கடிதம்!!

செவ்வாய் 28, ஜூலை 2026 8:15:53 PM (IST)

தூத்துக்குடி இரண்டாவது கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்  என்று மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார்  காரணமாக தேவையற்ற முறையில் 2 ம் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டு வரும் 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட்டை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது நிலையத்துக்கு வரும் ரயில்கள் மற்றும் என்ஜின்கள் தடம் மாற்றும் பணிக்காக 1-வது ரயில்வே கேட்டை கடந்து மேலூர் பகுதியில் உள்ள எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி எல்லை வரை சென்று மீண்டும் பின்னோக்கி திரும்புகின்றன. ஆனால், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'ஆக்குபென்சி சென்சார்' (Occupancy Sensor / Axle Counter Sensor) செயல்படுவதால், ரயில் 2-வது ரயில்வே கேட்டை அடையாத நிலையிலும் தானாகவே எச்சரிக்கை சிக்னல் செயல்பட்டு 2-வது ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இதன் காரணமாக நாள்தோறும் பல முறை தேவையின்றி 2-வது ரயில்வே கேட் மூடப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலவிரயம் அடைவதுடன், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களும் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சிக்னல் சென்சாரை தொழில்நுட்ப ரீதியாக மாற்றி அமைத்து, 2-வது ரயில்வே கேட் மூடுவதற்கான சிக்னல் அமைப்பை தனித்தனியாகப் பிரிக்கும் (Signal Interlocking System) நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள  வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகனிடம் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமிJul 29, 2026 - 02:05:20 PM | Posted IP 104.2*****

மீள் விட்டான் ரயில் நிலையம் தான் தீர்வு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory