» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

பாலப்பள்ளம், களியக்காவிளை, கருங்கல் பேருந்து நிலைய பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் இன்று (29.07.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய சாலைகள், பேருந்துநிலைய பணிகள், மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக பாலப்பள்ளம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஆலஞ்சி ஜங்சனில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டப்பட்டது. தற்போது பணி தொடங்கப்பட்டு, கூரைக்கான கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து களியக்காவிளையை சுற்றி உள்ள பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் களியக்காவிளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பேருந்துநிலையத்தில் தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல்தளத்தில் 4 கடைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடைகள் மற்றும் உணவகமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்கள், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக கழிப்பறைகள், கை கழுவும் இடம், சுகாதார பொருட்கள் வைக்கும் அறை, குடிநீர் வசதிகள் என அடிப்படை வசதிகளுடன் பேருந்துநிலையம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பணிகளை நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்திட பேரூராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கருங்கல் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள மருத்துவ கட்டிடம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழுதடைந்த கட்டிடத்தினை இடித்து, புதிய கட்டிடம் கட்ட திட்ட வரைவு தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மருத்துவமனைகயில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும், மகப்பேறு சேவைகளை மேம்படுத்த, கூடுதலாக மயக்க மருந்து நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். இக்கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இப்பேருந்து நிலையத்தில் 34 கடைகள் கட்டப்பட்டுள்ளது. தந்போது தரை ஓடுகள் பதிக்கும் பணி, குழாய்கள் அமைக்கும் பணி, மின்சார பணிகள், பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள அனைத்து பணிகளையும் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து குலசேகரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
ஆய்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, பேரூராட்சி தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)


