» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உப்பளத் தொழிலைக் காக்கப் போராட்டம் நடத்தினால் தூத்துக்குடி தாங்காது: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:06:07 AM (IST)

subashPannayar.jpg

உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவைச் செயலாளரும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவருமான சுபாஷ் பண்ணையார் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் கோவளம், பசுவந்தனை, தன்பாடு ஆகிய இடங்களில் கடந்த 93 ஆண்டுகளாகச் சிறிய அளவிலான உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சார் ஆட்சியர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் சுபாஷ் பண்ணையார் பேசியதாவது: "இப்பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமே உப்புத் தொழிலும் மீன்பிடித் தொழிலும் தான். ஏற்கனவே பனைத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உப்பளத் தொழிலையும் அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதற்குத் தீர்வு காண வேண்டியவர்கள் அதிகாரிகள் அல்ல; தமிழக அரசுதான்.

உப்பள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்கப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கும் நிலை ஏற்பட்டால், தூத்துக்குடி மாவட்டம் அமைதியாக இருக்காது. எனவே, அரசே எங்களைப் போராட்டத்திற்குத் தள்ளாமல் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைச் சந்திக்க முடியவில்லை. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்." என்றார்

இப்போராட்டத்தில் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் செயலாளா் சேகர், தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், முருகேசன், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ பால், பிரபாகர் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பொன்ராஜ், பரமசிவன், பேச்சிமுத்து மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, பொட்டல்காடு, புல்லாவழி, எம். சவேரியார்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய உப்புத்தொழில், மீன்பிடித் தொழில் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து

உப்புAug 3, 2026 - 02:34:07 PM | Posted IP 172.7*****

உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுபாஷ்Aug 2, 2026 - 03:51:57 PM | Posted IP 162.1*****

மத்திய அரசு கொண்டு வரும் கப்பல் கட்டும் தளம் அமைய இருக்கும் இடம் 6 பேரை தவிர அனைத்தும் ஆட்டையபோட்ட புறம்போக்கு இடம் சுபாஷ் இடமும் இதில் பறிபோகிறது. இதுவரையில் குடும்ப வன்மத்துக்காக கொலைகள் பல செய்த சுபாஷ் என்ற சிவசுப்பிரமணியன் வழக்கம் போல தனது சுய லாபத்திற்காக இங்கு வந்து என்கவுன்டரில் இருந்து தப்பிக்கவே போராளி வேடமணிந்துள்ளார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory