» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:33:57 AM (IST)
தூத்துக்குடியில், மது குடிப்பதற்கு பணம் தராததால் மனைவியுடன் தகராறு செய்து, வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம், அய்யாதுரை காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த இவர், தீவிரக் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவர் தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிப்பதற்குப் பணம் கேட்டுச் சண்டையிட்டுள்ளார்.
அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு உள்ளே பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கணவர் கதவைத் திறக்காததால், முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோதும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டே இருந்தது. சந்தேகமடைந்து அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இசக்கிமுத்து வீட்டில் உள்ள சீலிங் கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)



காரணம்Aug 8, 2026 - 06:22:17 PM | Posted IP 172.7*****