» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)
தூத்துக்குடியில் நாளை (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூர் விடுமுறை காரணமாக ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான முகாம் நாளை (14.08.2026 - வெள்ளிக்கிழமை) கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
எனினும், கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள 'தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவை' முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 14) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)



Sakthi Balan. SAug 13, 2026 - 09:17:15 PM | Posted IP 172.7*****