» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)
பணகுடி அருகே மொபெட் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அன்னை நகரைச் சேர்ந்த ஜெகதா (44), நெருஞ்சி காலனியைச் சேர்ந்த மரிய விஜயா (42) மற்றும் பாப்பா (50) ஆகிய 3 பெண்களும் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில், 3 பேரும் ஒரே மொபட்டில் கோழிப்பண்ணைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
மொபட்டை ஜெகதா ஓட்டிச் சென்றுள்ளார். பாம்பன்குளம் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மொபட் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், மரிய விஜயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ஜெகதா மற்றும் பாப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜெகதாவிற்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பெண் தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)


