» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, காவல்துறையினரின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் வாரந்தோறும் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகள் வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், மாணவ - மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காவல்துறையினரின் உதவியுடன் வி.இ.ரோடு பகுதியில் சிறப்பு அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சாலையோர ஆக்கிரமிப்புகள், தற்காலிகத் தடுப்புகள், பதாகைகள் மற்றும் மின்கம்பங்களில் விதிமுறைகளுக்கு முரணாகத் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
இந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் பதாகைகள் அகற்றும் பணி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மாநகரத்தை அழகாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும். எனவே, மாநகராட்சி மேற்கொள்ளும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
JAMESAug 28, 2026 - 12:50:21 PM | Posted IP 104.2*****
In Great Cotton Road, From Old Municipal office to Central Police Station , The Pedestrians path way is totally blocked and encroached upon by the traders on both the sides preventing the pedestrians to use the pathway. Please look into it
Antony Paul Raj PAug 28, 2026 - 12:02:52 AM | Posted IP 172.7*****
Tharuvaikulam Road shrunk from 50 feet to 7 feet. Please do needful
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:11:24 AM (IST)

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)



RamanathanAug 28, 2026 - 08:11:59 PM | Posted IP 104.2*****