» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!

வெள்ளி 21, ஜனவரி 2022 11:51:13 AM (IST)



விளாத்திகுளம் அருகே கோவில் வளாகத்தில் பெண்கள் குளியலறையில், ரகசியமாக 3 கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவ நாயக்கன்பட்டி. கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகாமாக்ஷியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொருமுறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கென இந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்வதற்காக இக்கோவிலுக்கு வருகின்றனர். 

அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பெளர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். 

அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் கோவில் நிர்வாகத்தினர். 

கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், இக்கோவிலுக்கு சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில் கூடுதலாக 2 ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். 

மேலும் இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ரகசிய கேமரா வைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எவ்வித புகார் மனு அளிக்க வில்லை என்பதும் இதுபற்றிய தகவல் தெரிந்தும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாரும் குற்றவாளியை கண்டுபிடிக்க தயக்கம் காட்டி வருவதும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இக்கோவிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும் போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக தொடர்ந்து படம் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

ஒரே சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் வழிபடும் இக்கோவிலில் இச்செயல் அரங்கேறியிருப்பது அக்கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆன்மீக திருத்தலத்தில் பல மாதங்களாக பல பெண்கள் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக படமெடுத்த மர்ம அயோக்கினை போலீசார் விரைந்து கைது செய்வது மட்டுமின்றி, அவனிடம் இருக்கும் வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. விளாத்திகுளம் அருகே புனிதமான இக்கோவிலில், இதுபோன்று நிகழ்ந்த இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்


மக்கள் கருத்து

adaminJan 22, 2022 - 01:25:28 PM | Posted IP 108.1*****

sex education is important. government should take initiative. but it will never do.

BalaJan 21, 2022 - 04:46:21 PM | Posted IP 162.1*****

பூசாரிகளுக்கு பூஜை செய்தால் உண்மை வெளி வரும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory